புனித நோன்பை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜிதுகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையில் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் ஊடாக மஸ்ஜிதுகளுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட மேற்படி பேரீத்தம் பழங்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பங்களிப்போடு பகிர்ந்தளிக்கப்பட்டன.
முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.இப்ஹாம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.பி.எஸ். ஹேரத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த பேரித்தப்பழங்களை மஸ்ஜித் நிர்வாகிகளிடம் கையளித்தார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் சார்பில் அவரது செயலாளர் ஜமால்தீன் ஜௌசி கலந்துகொண்டார்.
இதன்போது புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 194 மஸ்ஜிதுகளுக்கு தலா 20 கிலோ வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






