இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை அதிகரிக்க தீர்மானம்

கொழும்பு, ஏப் 13

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இறக்குமதி செயலாக்க அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்திற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி, பங்களாதேஷ்  மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, பங்களாதேஷில் முதலீடு செய்ய இலங்கை தொழில்துறையினரை முன்வருமாறு  பங்களாதேஷ் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply