அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னாலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இன்று ஆறாவது நாளை எட்டியுள்ளதுடன் தினமும் ஆர்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு ஏராளமானமக்கள் கூடிவந்து ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை சித்திரைப் புத்தாண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களால் குறித்த பகுதியில் கொண்டாடப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் சில தன்னார்வ அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு புத்தாண்டு பலகாரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








