ஜனாதிபதி – பிரதமர் இம்முறை புத்தாண்டைக் கொண்டாடினார்களா?

இந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லத்தில் நடைபெறும் புத்தாண்டு சடங்குகளை இலங்கையில் உள்ள ஒரு தொலைக்காட்சி கூட நேரடியாக ஒளிபரப்பவில்லை என அறியமுடிகிறது.

கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் வீட்டில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களை பல தொலைக்காட்சி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பி இருந்தன.

எனினும் இம்முறை நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக புத்தாண்டு நிகழ்வொன்றும் முன்னெடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

இந்த வருடமும், பிரதமரின் இல்லத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருந்த போதிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்ட பாரிய அதிருப்தி காரணமாக அத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply