டெல்லியில் மீண்டும் கொரோனா!

புதுடெல்லி, ஏப் 14

டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக வேகமாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. 

திங்கட்கிழமை  137 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் வியாழக்கிழமை தொற்று பாதிப்பு 325 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்களின் எண்ணிக்கை விகிதம் மிகக்குறைவாகவே உள்ளது.

இதனால், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply