அரசுக்கு எதிரான போராட்டம்: உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்

கொழும்பு, ஏப் 15

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 7 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply