திருமலையில் பாடலுடன் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

திருகோணமலை பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (16) அரசாங்கத்திற்கெதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் கலைஞர்களும், பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் வாசங்களை ஏந்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

அத்தோடு அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பினை பாடல் மூலமாகவும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply