தடம்மாறுகிறதா அரசுக்கெதிரான காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம்!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அந்தவகையில் தன்னார்வலர்களால் கடந்த ஆறு தினங்களாக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது.

அதேசமயம் ஆர்ப்பாட்டக்காரர்களால் குறித்த பகுதி கோட்டா கோ கம என்றவாறு பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு வேண்டிய உணவு மற்றும் தங்குமிடங்கள் இதர வசதிகளை சில அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட எழுச்சியானது தற்போது மிகவும் குறைந்து வருகின்றது.

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்றுவரும் இவ் ஆர்ப்பாட்டமானது கடந்த சில நாட்களாக வேறுபாதையில்செல்லும் போக்கு காணப்படுகின்றது.

குறிப்பாக சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அங்கே கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள்,ஆடல் பாடல் என நடைபெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில் சிலரது செயற்பாடுகளால் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் மாறி வேறொரு திசையில் பயணிக்கப்போகின்றதா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Leave a Reply