
தமது எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை வரையறைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் தமது நிறுவனத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.





