புதிய அரசு அமைந்தால், தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் – சுரேஷ் தெரிவிப்பு

நாட்டு மக்கள் இப்போது மிகவும் கோபத்துடனும்,விழிப்புடனும் உள்ளனர் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களில் 90 க்கும் அதிகமான மக்கள் இப்போது அரசில் கோபத்தில் உள்ளனர்.

ஆகவே பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்வது பற்றி ஏதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு ஆரம்பமாக நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையை இல்லாமல் ஒழித்தாலே அது வெற்றியாக அமையும்.

இதன் மூலம் தனிநபர் ஒருவர் தானே தீர்மானம் எடுக்கும் நடவடிக்கை இல்லாமல் போகும்.

இதை விட சஜித் பிரேமதாச தலைமயிலான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு கையெழுத்திடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு ஆட்சியில் உள்ள அரசை கவிழிப்பது முக்கியம் அல்ல. நாடு இருக்கும் நிலைமையில் அடுத்தது என்ன செய்யலாம் என்று இவர்களிடம் திட்டம் இருக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி முறைமையை இல்லாமல் ஒழிப்பதை முதலில் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் நாம் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

அதிலே ஜனாதிபதி முறையமை இல்லாது ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குவது என்று கதைத்தோம்.

ஆனால் அது எவ்வளவு தூரம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று கூற முடியாது.

இதேவேளை எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கப்போகின்றோம் என்ற நிலை வரும் போது, தமிழ்க் கட்சிகளின் ஆதரவைக் கேட்டால், நாம் அனைவரும் ஒரே விடயத்தை வலியுறுத்தி ஒன்றாக சேர்வது நல்லது. அது தான் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமாக அமையும் என்றார்.

Leave a Reply