விசேட பஸ் சேவைகள் முன்னெடுப்பு

சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பிற்கு திரும்புவோருக்காக இன்று  (வெள்ளிக்கிழமை ) முதல் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை பஸ் போக்குவரத்தை முழுமையாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது டீசல் பற்றாக்குறை இல்லையெனவும் எதிர்வரும் நாட்களுக்கு தேவையான டீசலை முற்பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொழும்பிற்கு திரும்புவோருக்காக நாளை மறுதினம் முதல் மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்

Leave a Reply