ஜனாதிபதி – பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கிடையில் விசேட சந்திப்பு

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு தற்போது கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்க பெட்ரோலிய தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply