
கடவத்தையில் உள்ள ஆடையகம் ஒன்றில் பணப்பெட்டகை உடைத்து 2.7 கோடி ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு நடந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 32 வயதான சந்தேகநபர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இவர் வங்கிக்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.





