
முல்லைத்தீவு- நெடுங்கேணி- களிக்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தண்டுவானில் இருந்து முள்ளியளை நோக்கி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து குறித்த பகுதியில் பாலத்தில் மோதி பின் வயல்கம்பிக்கட்டையில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த அவர் இரவு வேளை வீதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதால் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 6 ஆம் வட்டாரம் குமுழமுனையைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் (வயது-44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடல்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படம் என்று தெரிவித்த முள்ளியவளை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





