அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயற்படுகிறேன் – பதவி விலக போவதில்லை!- ஜனாதிபதி திட்டவட்டம்

எந்த வகையிலும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரச உயர் மட்ட அதிகாரிகள் சிலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனை கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே தான் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மக்கள் கொழும்பு காலிமுகத்திடல் உட்பட நாட்டில் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி மாத்திரமல்லாது அரசாங்கமும் பதவி விலகி செல்ல வேண்டும் எனவும் அவர் கூறி வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே பதவி விலக போவதில்லை என்று ஜனாதிபதி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply