இந்தியாவில் கரை ஒதுங்கியது முல்லைத்தீவு படகு!

முல்லைத்தீவில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரு மீனவர்கள் பயணித்த படகு இயந்திரக் கோளாறு காரணமாக தூத்துக்குடியில் கரை ஒதுங்கியுள்ளது.

இதன்போது, றொசான் வயது 29 என்னும் முல்லைத்தீவு மாவட்டத்தையும், சுதாகர் வயது 26 என்னும் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்த இரு மீனவர்களே இந்தியாவில் கரை சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

இவர்கள் தொடர்பில் இந்தியப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply