முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு சென்றுள்ளதாக இன்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியது.
இதேவேளை குறித்த செய்தியை பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதாநாத் காசிலிங்கம் மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
இது பொய்யான செய்தி அவர் இலங்கையில் இருக்கின்றார் என பதிவிட்டுள்ளார்.






