ராணுவ வீரர்களுக்‍கு சீன மொழி பயிற்சி

டெல்லி, ஏப் 16

சீனாவுக்‍கு எதிராக இந்திய ராணுவத்தை முழுவீச்சில் தயார்படுத்த ராணுவ வீரர்களுக்‍கு சீன மொழி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020ம் ஆண்டு இந்திய, சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவானது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், சில இடங்களில் இருந்து படைகள் பின்வாங்கினாலும் , தற்போதும் பல இடங்களில் இரு நாட்டு வீரர்களும் குவிக்‍கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லையில் படையை பலப்படுத்தும் அதேநேரம், சீன வீரர்களுடன் அசாதாரண சூழலில் மொழிப்பிரச்சனையை தீர்க்க இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வி நிலையங்களிலும் சீன மொழிகளில் எம்.ஏ. பட்டத்தினை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பெறுவதற்கு வசதியாக இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சீன மொழி, கலாச்சாரம், அரசியல், அந்நாட்டு பழக்க வழங்கங்கள் ஆகியவற்றில் இந்திய ராணுவம் அத்துப்படியாக வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply