செய்தியாளருக்கு சொகுசு அடுக்குமாடியை வழங்கிய வடகொரிய அதிபர்

சியோல், ஏப் 16

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்தியாளர் ரின் சுன் ஹி என்பவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார்.

70 வயதாகும் ரி சுன் ஹி, கடந்த 50 ஆண்டு காலமாக வடகொரியாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் சிலவற்றை செய்திகளாக வழங்கி புகழ்பெற்றவர்.

1994-ம் ஆண்டு தந்தை கிம் இல் சுங்கின் மரணம், 2006-ல் வடகொரியா முதல் அணு ஆயுத சோதனை வரை என பல்வேறு முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply