சங்கானையில் இடம்பெற்ற தேங்காய்ப் போர்!

யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் இன்றையதினம்(16) மாபெரும் தேங்காய் போர் நிகழ்வு சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பங்குபற்றியிருந்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களுள் ஒன்றாக விளங்கும் தேங்காய்களுக்கு இடையிலான போர் விளையாட்டு கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக சங்கானை மண்ணில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply