<!–
நடிகர் விமல் மீது பணமோசடி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சினிமான தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்துள்ள முறைப்பாட்டில், ” நடிகர் விமல் மன்னர் வகையறா என்ற திரைப்படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி ரூபாய் வாங்கினார். அந்த படத்தின் லாபத்திலும் பங்கு தருவதாக கூறினார்.
ஆனால் என்னிடம் வங்கிய கடன் தொகை 5 கோடியை நடிகர் விமல் திருப்பித்தரவில்லை. அவர் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எனக்கு தரவேண்டிய 5 கோடியை திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டார். குறித்த பணத்தை வசூலித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






