
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு முதியவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாடு கொந்தளிக்கிறது , இதன் பொருட்டு அரசாங்கம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் .அது நல்ல முடிவாக இருக்க வேண்டும் என நாங்களும் எதிர்பாக்கின்றோம் .
எல்லா இன மக்களும் இந்த நாட்டில் சந்தோசமாக வாழக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். அதுதான் இப்பொழுது எங்களுக்கு வேண்டும் .
நாடு முன்னேற நான்கு இன மக்களும் ஒற்றுமையாக இணைய வேண்டும்.
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு தான் இன்று பேச்சு பொருளாக நாட்டில் இருக்கிறது.
ரம்புக்கனையில் மக்களின் எதிர்ப்பு கடுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது . அதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துவருகின்றது .
மக்களின் உணர்வை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் . நாடு பழைய நிலைக்கு திரும்ப மேலும் ஆறு மாத காலம் சரி எடுக்கும் என்றார்.





