பூஸா சிறைச்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று!

பூஸா சிறைச்சாலையில் மேலும் 28 கைதிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இச் சிறைச்சாலையில் 38 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 28 கைதிகளுக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொற்றாளர்களுடன் சேர்த்து தென் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலை தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,640 ஆக உயர்வடைந்துள்ளது என தெரியவருகிறது.

Leave a Reply