நெருக்கடி நிலை தொடர்பில் பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் எச்சரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண இணக்கப்பாட்டுக்கு வருமாறு மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். .

மேலும், புதிய அமைச்சரவையை நியமிப்பது பொருத்தமான நடவடிக்கையல்ல என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 20வது திருத்தத்தை ரத்து செய்து, 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள நல்ல அம்சங்களை இணைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அவ்வாறு செய்யத் தவறினால் ‘சங்க மாநாட்டை’ அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தனர்.

Leave a Reply