முல்லைத்தீவில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது

முல்லைத்தீவு- கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வனஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.

5 அடி நீளம் கொண்ட குறித்த பெண் சிறுத்தை, புலி வேட்டைக்காக கட்டப்பட்டிருந்த தடத்தில் சிக்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மேலும் சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் வில்பத்து காட்டில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply