கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள் – சித்திரமாலி டி சில்வா

கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற “இலங்கையில் தடுப்பூசி ஏற்றலின் இப்போதைய நிலை” தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தெற்காசிய நாடுகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி ஏற்றிய முதலாவது நாடாக இலங்கை மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட முறையின் கீழ் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் 13 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இது மொத்த சனத்தொகையில் 63 சதவீதமாகும், 2 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 51 சதவீதத்தையும் தாண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply