கொடிகாமத்தில் வானில் வந்த கும்பல்- ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

யாழ். கொடிகாமம் பகுதியில் வானில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று , ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

கொடிகாமம் கரம்பகம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், வான் ஒன்றில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் நேற்றிரவு 08 மணியளவில் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில், கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply