நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.
இவ் மின்வெட்டு காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மே 01 மற்றும் மே 3 ஆம் திகதிகளில் மின்சார விநியோகம் தடைப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மே தினம் மற்றும் ரம்ஜான் பண்டிகை மேற்கூறிய தேதிகளில் வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.