படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் 17 வது நினைவு தினத்தினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (29) மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் வைத்து மறைந்த ஊடகவியலாளர் டி.சிவராமின் உருவப் படத்திற்கு தீபம் ஏற்றி, மரல்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்h கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன.இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படது.இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கோ.கருணாகரம்(ஜனா), இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இ.விரசன்னா, இரா.துரைரெத்தினம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் த.சுரேஸ், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *