யாழ்ப்பாணம்,ஏப் 29
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உதவ முன்வந்துள்ளமை தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு நன்றி கூறும் வகையில் முகநூல் வழியாக, நேரலையில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறியிருந்தார்.
தொடர்ந்தும் விவசாயம் சார்ந்த உதவிகளை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் தமிழக முதல்வரிடம் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.