யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வு நேற்றையதினம் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ். சுதர்சன் யாழ் மாநகர ஆணையாளர் த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் நல்லிணக்க இப்தார் நிகழ்வில் விசேட உரைகளை மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி) , மௌலவி ஏ. எம். ரழீம், மௌலவி ஏ.டபள்யூ. பி. அன்பர் (நஜாஜி) உள்ளிட்டோர் வழங்கியிருந்தனர்.