யாழ்ப்பாணம் – பலாலி பகுதியூடாக படகேறி தமிழகம் செல்ல முற்பட்ட 13 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தப்பிச் செல்வோர் தொகை அதிகரித்து வருகின்றது.
இதற்கமைய, நேற்று இரவு தமிழகம் செல்லும் நோக்கில், ஒரு படகில் பயணித்த 13 பேரை இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 13 பேரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.