புதிய அமைச்சுகள் தொடர்பான வர்த்தமானி வெளியானது

கொழும்பு, ஏப் 30

புதிய அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெற்றிருந்தது. இதன்போது 17 அமைச்சரவை அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் முதன்முறையாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், 21 புதிய இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர். இந்நிலையில், புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள போதிலும், தற்பொழுதே அமைச்சுகளின் விடதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply