ஹட்டன், ஏப் 30
விசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 25 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் ஹட்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று ஹட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.