
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி திகதி வழங்கப்பட உள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி 306 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட இருந்தன.
எனினும், இந்த நியமனம் வழங்கலை இடைநிறுத்துமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியமையால், நியமனம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் 3ஆம் திகதி குறித்த நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறிருப்பினும், நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால், ஆசிரியர் உதவியாளர்கள், அழைப்புக் கடிதங்கள் தாமதமானால், 0719 761 150 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு நியமனங்களை உறுதிசெய்துகொள்ளுமாறு மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரட்ண தெரிவித்துள்ளார்.





