இரசாயன உர இறக்குமதிக்கான விலை சூத்திரம் அறிமுகம்! விவசாய அமைச்சர்

இரசாயன உர இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்காக விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் போகத்திற்காக யூரியா உள்ளிட்ட உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகையினை சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளின் ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply