இலங்கையில் இளைஞர்களுக்கான உயர்கல்வியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்! லிதுவேனியா தூதுவர்

இலங்கை இளைஞர்களுக்கான அபிவிருத்தி, வாய்ப்புக்கள் தொடர்பில் இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக், இலங்கைக்கான லிதுவேனியாவின் தூதுவர் ஜூலியஸ் பிரணவிசியஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முப்தி முயீன் இலங்கைக்கான லிதுவேனியாவின் தூதுவர் ஜூலியஸ் பிரணவிசியஸ் மற்றும் இலங்கைக்கான லிதுவேனியாவின் பணிப்பாளர் கான்சன கொடிடுவக்கு இடையில் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், இலங்கை இளைஞர்களுக்கான உயர் கல்வி, விளையாட்டு, சிறு முயற்சியான்மை மற்றும் தலைமைத்துவ திறன்கள் விருத்திக்கான
வாய்ப்புக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

மேலும், லிதுவேனியாவின் அரசியல் துறையில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவதாக தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

லிதுவேனியா மற்றும் இலங்கைக்கான இராஜதந்திர உறவானது 25 வருடங்களாக சிறந்த முறையில் பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர், இரு நாடுகளினதும் உறவு இளைஞர்களின் ஊடாகவும் மேலும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பிட்டிருந்தனர்.

Leave a Reply