வடகிழக்கு, பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை!

<!–

வடகிழக்கு, பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை! – Athavan News

வடகிழக்கு, பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை செய்யவுள்ளார்.

இதில் முக்கியத் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறியவுள்ளார். இதனையடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply