சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுமா? பெங்களூர் அணியுடன் இன்று மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 35ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு டோனியும் பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.

நடப்பு தொடரில் முன்னதாக இரு அணிகளும் மோதிக் கொண்ட போட்டியில், சென்னை அணி 69 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இரு அணிகளும் இதுவரை 27 முறை மோதியுள்ளன. இதில் 17முறை சென்னை அணியும் 9 முறை பெங்களூர் அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவுக்கு இல்லை.

இதுவரை எந்த அணிகளுமே பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பினை உறுதிசெய்யாத நிலையில், இரு அணிகளுக்கும் இப்போட்டியின் வெற்றி மிக முக்கியமானதாகும்.

Leave a Reply