அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று 24 நாளை எட்டியது.
இந்நிலையில் இரவு பகலாக தொடரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதி கோட்டா கோ கம என பெயரிடப்பட்டு சகல வசதிகளையும் உள்ளடக்கிய பகுதியாக காணப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதி வேண்டி இன்றையதினம் இரவு கோட்டா கோ கமவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் படத்தினை கைகளில் ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.








