யாழிலிருந்து கொழும்பிற்கு கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு காரில் கஞ்சா கடத்திச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட  மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்குளம் A9 வீதியில் உள்ள சோதனைச்சாவடியில்  கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது 6 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்  உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரும்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply