காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ்

ஆபிரிக்கா, மே 05

ஆபிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் காங்கோ அரசு ஈடுபட்டுள்ளது.

காங்கோவில் உள்ள ஈக்வடார் மாகாணத்தில் பண்டகா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி ஒருவருக்கு எபோலா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. எபோலா தாக்கிய நபர் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிரிழந்தார். இதனை காங்கோவின் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிச் செய்துள்ளது. எபோலாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 267 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி வருகின்றது.

Leave a Reply