எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்கு கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும், எரி­பொ­
ரு­ளைக் கட­னா­கப் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பி­லும் இந்­தியா மற்­றும் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­து­டன் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது.
இதன்­படி இந்­திய அர­சி­ட­மி­ருந்து 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கடன் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பில் இலங்கை அரசு பேச்­சு­களை ஆரம்­பித்­துள்­ளது என ஜனா­தி­பதியின் செய­லா­ளர் பி.பி.ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார் என்று ‘எக­னமி நெக்ஸ்ட்’ செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

நிலு­வை­யில் உள்ள எரி­பொ­ருள் கொள்­வ­ன­வுக்­கான தொகை­யைச் செலுத்­து­வ­தற்­கும் புதி­தாக எரி­பொ­ருள் கொள்­வ­னவு செய்­வ­தற்­குமே இந்­தக் கடன் தொகை பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என­வும் அவர் கூறி­யுள்­ளார்.
இலங்கை பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னம் இரண்டு முக்­கிய உள்­நாட்டு வங்­கி­க­ளில் கிட்­டத்­தட்ட 3.3 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­க­ளைக் கட­னா­கப் பெற்­றுள்­ளது என­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஊட­கங்­க­ளில் கூறப்­பட்­டுள்­ள­தைப் போன்று ஈரா­னி­ட­மி­ருந்து கடன் கோரப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்­துள்ள அவர், “கட்­டுப்­பா­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நாடு­க­ளு­டன் நாங்­கள் கடன்­கள் தொடர்­பான விட­யங்­க­ளைக் கையாள்­வோம்” என­வும் அவர் கூறி­யுள்­ளார். இதே­வேளை, எரி­சக்தி அமைச்­சர் உதய கம்­மன்­பில, ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­ட­மி­ருந்து கடன் அடிப்­ப­டை­யில் எரி­பொ­ருள் கொள்­வ­னவு செய்­வது குறித்து பேச்­சு­களை முன்­னெ­டுத்­துள்­ளார்.

கடன் வச­தி­யில் கச்சா எண்­ணெயை கொள்­வ­னவு செய்­வது தொடர்­பில் எமி­ரேட் நேஷ­னல் எண்­ணெய் நிறு­வ­னத்­தின் மூத்த அதி­கா­ரி­க­ளு­ட­னான பேச்­சு­கள் சாத­க­மாக முடி­வ­டைந்­துள்­ளன என­வும் அமைச்­சர் கம்­மன்­பில சில நாள்­க­ளுக்கு முன்­னர் தனது ருவிற்­றர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

Leave a Reply