தலைநகரின் முக்கிய பகுதியில் பதற்றம்! – நடுச்சந்தியில் அமைக்கப்படும் கூடாரம்

ஆர்மர் வீதி பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மக்கள், பொலிஸ் நிலையம் எதிரே நடுத்தெருவில் தற்காலிக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மக்கள் எரிவாயு கோரி இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, எல்பி எரிவாயு சிலிண்டர்களை கோரி நாவின்ன சந்தியில் 138, ஹைலீவர் வீதியை மறித்து மற்றுமொரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாவின்ன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு எடுப்பதற்காக மக்கள் பல நாட்களாக வரிசையில் நிற்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மண்ணெண்ணெய் கோரி ஒருகொடவத்தை சந்தியிலிருந்து கிராண்ட்பாஸ் வரையான பிரதான வீதியான அரச வீதியில் பாதையை மறித்து இன்று காலை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply