அவசரகால சட்ட பிரகடனம் மே18 நினைவேந்தலை தடுக்கும் உள்நோக்கம் கொண்டது-சபா.குகதாஸ் கண்டனம்.

நாட்டில் அவசரநிலைச் சட்டத்தை அமுலாக்கம் செய்ய வேண்டிய அளவிற்கு மோசமான அனர்த்தங்கள் அல்லது வன்முறைகள் நடைபெறாத போதும் ஐனாதிபதி கோட்டாபய அவர்கள் குறித்த சட்டத்தை பிரகடனப்படுத்தி உள்ளார் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் பல உள்நோக்கங்கள் உள்ளன அதில் முதன்மையானது மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

காலிமுகத்திடல் போராட்டம் பல நாட்களை கடந்த நிலையில் மக்கள் போராட்டங்களை அரச வளங்கள் யாவற்றையும் ஒருகிணைத்து கட்டுப்படுத்தும் ஐனாதிபதி திடீரென திட்டமிட்டு அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியமை எதிர்வரும் மே 18 யை முன்னிட்ட வாராந்த நினைவேந்தல்களை தடுக்கவும் மேலும் மே18 அன்று முள்ளிவாய்க்காலில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொள்வதை தடுப்பதுடன் தென் பகுதிகளில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு மக்கள் வரக்கூடும் என்ற சந்தேகங்கள் இருப்பதன் காரணமாக அதனை தடுக்கவும் இந்த அவசரகால சட்டத்தை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply