மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் – 9 பேர் காயம்! (வீடியோ இணைப்பு)

மஹிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அங்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

மஹிந்த ஆதரவாளர்களால் கோட்டா கோ கமவிலும் கூடாரங்கள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரின் தடைகளை மீறி காலிமுகத்திடலை நோக்கி மஹிந்த ஆதரவாளர்கள் முன்னேறிச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகின்றது.

https://www.facebook.com/SamugamLk/videos/419702206238007

Leave a Reply