தீவிரமடையும் காலிமுகத்திடல் பதற்ற சூழல் – பெருமளவான அதிரடிப்படை, பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவு குவிப்பு!

காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற சூழல் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக 9 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவான அதிரடிப்படை, பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவு குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும் “கோட்டா கோ கம” பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களும் உடைத்து எறியப்படுகின்றன.

காலிமுகத்திடல் பகுதியில் பதற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply