கிண்ணியாவில் எரிபொருள் விநியோகத்தின் போது பதற்ற நிலை! (படங்கள் இணைப்பு)

திருகோணமலை_கிண்ணியா எரிபொருள் நிலையத்தில் இன்று (21) மாலை பெற்றோல் வருகையினை அடுத்து விநியோகம் இடம்பெற்றது.

மிக நீண்ட வரிசையில் பெற்றோலினை பெறுவதற்காக மக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் அதிகமான சன நெறிசல் காரணமாக பெற்றோல் விநியோகம் இடம் பெற்ற நிலையில் விநியோக இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதால் நிலைமை மோசமாக மாறியது.

கிண்ணியா மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இந்த நிலை ஏற்பட்டதுடன் பொலிசார்  பாதுகாப்பு கடமையில் இருந்தனர்.

ஒரு சில மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையிலும் கூட பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது.

இதேவேளை அங்கு சுமூகமான நிலையின்மை ஏற்பட்டதால் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு பல இன்னல்களுக்கு மத்தியில் விநியோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply