இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தடைசெய்யக்கோரி ஸ்டாலினுக்கு மனு!

இராமமேஸ்வரத்திலிருந்து இந்திய இழுவைப்படகுகள் நாளைய தினம் தவணைக் காலம் நிறைவடைந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தயாராக இருப்பதானால் இலங்கை வடக்கு கடற்தொழிலாளர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு நாளைய தினம் மனு சமர்ப்பிக்க உள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார் .

இது தொர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ;

இந்திய இழுவைப்படகுகள் நாளைய தினம் தவணைக் காலம் நிறைவடைந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தயாராக இருக்கின்றனர் .

வடக்கு கடற்றொழில் சமூகம் மிகப்பெரும் அச்சத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த அச்சத்தினை தவிர்க்குமாறு தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் ,வெளிவிவகார அமைச்சர் ,இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ,இந்தியத்தூதுவர் ,கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மனு ஒன்றினை தயாரித்து நாளைய தினம் கையளிக்க உள்ளோம்.

இந்திய இழுவைப்படகுகளை எங்களது எல்லைக்குள் விடாது தடுத்து நிறுத்தி பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என 50 ஆயிரம் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் குடும்பங்களை உள்ளடக்கிய 2 இலட்சம் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

அந்தவகையில் ,இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத தமிழ்நாட்டு இழுவைமடித்தொழிலை நிறுத்துமாறு வடமாகாண தமிழ் மீனவர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு சபை நீங்களும் தழிழ்நாட்டு சட்ட உறுப்பினர்களும் அனுப்புவதற்கான தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியமைக்கு தமிழ் மீனவர்கள் ஆகிய நாங்கள் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றோம் .

123 கோடி இந்திய ரூபா பெறுமதியான அரிசி பால்மா மற்றும் மருந்து பொருட்களையும் எமது வடக்கு பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான குடும்பதிற்கு இலவசமாக வழங்கி உள்ளீர்கள் .

2009 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் கொழும்பு ஆட்சியில் கடந்தகாலங்களில் இருந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் குடும்பங்கள் கடுமையான கஸ்டங்களுக்கு உள்ளாகியள்ளனர் .

இன்று முல்லைத்தீவு யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட தமிழ் மீனவ குடும்பங்கள் மின்சாரம் பெற்றோல் மற்றும் மீன்பிடி படகுகளுக்கு மண்ணென்ணெய் இன்றியும் அவதிப்படுகின்றனர் இதனால் வடமாகாண ஒட்டுமொத்த கடற்றொழிலும் பாதிக்கபட்டடுள்ளது இன்று 50000 மேற்பட்ட மீனவ குடும்பங்கள் 200000 மேற்பட்ட மக்கள் தங்கள் வருமானத்தை இழக்கின்றனர்.

இவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் எவ்வித நிவராணமும் இல்லை பாக்கு நீரிணையில் இலங்கை கடற்பரப்பில் தழிழ்நாட்டு இழுவை விசைப்படகுகள் இரண்டு 15 ம் திகதிக்கு பின் முடிவுற்ற பிறகு ஜூன் மாதம் மாத தடைக்காலத்திற்கு இராமேஸ்வரத்தில் இருந்து நாகபட்டினம் வரை ஆயிரக்கணக்கான தமிழக படகுகள் எமது கடல்வளங்களை அழிக்க வருமென அச்சத்தில் எமது கடற்பரப்பில் உள்ள வளமான மீனவர்கள் உள்ளனர் .

தமிழக சட்டவிரோத இழவைப்படகுகள் ஒவ்வொரு வருடமும் எமது கடலில் இருந்து 600 செல்வதாக பொருளியல் கோடி கடலுணவுகளை பெறுமதியான வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தவும் எமது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பவும் பெறுமதியான கடலுணவுகளை அறுவடைசெய்யவேண்டியுள்ளது .

எனவே வடக்கில் உள்ள தமிழ் மீனவர் ஆகிய நாங்கள் தமிழ் நாட்டில் உள்ள எமது சகோதரர்கள் அடுத்தவாரம் புதன்கிழகைக்கு பிறகு சட்டவிவேராத இழுவைமடித்தொழிலை செய்யமாட்டார்கள் எமது இலங்கைக் கடற்பரப்பில் என நம்புகின்றோம்.

இதே சமயத்தில் வடக்கில் உள்ள சிறு கடற்தொழில் மீனவர்கள் மிகக் கடினமாக இந்த நேரத்தில் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் ,தமிழ் நாட்டு முதலமைச்சர் இதற்கான ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே பராக்கு நீரிணையில் இரண்டு மாத தவணைக் காலம் முடிந்து நாளைய தினம் 15 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கும் சட்ட விரோத படகுகளை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையின் வடக்கு கடற்தொழிலார்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தமிழாக முதல்வருக்கு கடிதம் மூலம் கூறியிருந்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை இது எமக்கு பாரிய கவலையினை தருகிறது

மேலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வடக்கு கடற்தொழிலாள சமூகத்தை காப்பாற்ற எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ,புத்தியீவிகள் எமக்கு ஆதரவினை தந்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம் . என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *