திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பகுதியிலுள்ள ஆசாத் நகர், ஜின்னா நகர் பகுதிகளில் இன்று செவ்வாய்கிழமை மாலை ஐஸ் கட்டி மழை பொழிந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று மாலை 3.30 மணியளவில் மழை பெய்தபோது வீட்டுக்குமேல் அதிக சத்தம் கேட்பதாக வெளியில் வந்து பார்த்தபோது கட்டி ஐஸ் கட்டி மழை பெய்ததாக கிராமவாசி ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு விழுந்த ஐஸ் கட்டிகள் சிறிது நேரத்தில் கரைந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிற செய்திகள்